சென்னை; ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டிக்கும் வகையில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, […]