இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 6வது பட்டத்தை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது. இந்த ஆண்டு தோனி அன்கேப்ட் வீரராக களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப்க்கு தகுதி பெற தவறியது. கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் தோற்றதால் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற மெகா ஏலத்தில் வலிமையான அணியை எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். பல இளம் வீரர்களை இந்த முறை அணியில் எடுத்துள்ளனர். ஐபிஎல் 2025ல் சிஎஸ்கேவின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
டாப் ஆர்டர்
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். மேலும் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாட உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கெய்க்வாட் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஐபிஎல் 2023ல் கோப்பை வெல்ல ஐவரும் ஒரு காரணம். மறுபுறம் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து ஓப்பனிங் செய்ய உள்ளார். கெய்க்வாட் மற்றும் கான்வே சிறந்த தொடக்க ஜோடியாக உள்ளார். இந்த முறை மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி இறங்க உள்ளார். ரஹானேவிற்கு பதில் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த காலங்களில் சில நல்ல இன்னிங்ஸ் ஆடியுள்ளார்.
மிடில் ஆர்டர்
கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான மிடில் ஆர்டர் பேட்டர்களில் ஒருவராக சிவம் துபே உள்ளார். அவரின் சிக்ஸ் அடிக்கும் திறன் போட்டியை மாற்றுகிறது. குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார். தீபக் ஹூடா இந்த முறை 5 இடத்தில் பேட் செய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி அவரை எடுத்தது. சமீர் ரிஸ்விக்கு பதில் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ளார். ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங் மற்றும் பீல்டிங் என இரண்டிலும் கைகொடுக்க முடியும். பவர் பிளேயிலும் பந்து வீசும் திறன் கொண்டவர்.
பினிஷர்
ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே அணியின் பினிஷராக ரவீந்திர ஜடேஜா விளையாட உள்ளார். ஐபிஎல் 2023 கோப்பையை வெல்வதற்கு ஜடேஜா தான் முக்கிய காரணம். அந்த சீசன் முழுவதும் சரியாக பேட்டிங் கிடைக்கவில்லை என்றாலும் பைனலில் வெற்றி பெற செய்யார். கடந்த 2 சீசன்களாக கடைசி ஓவரில் மட்டுமே தோனி களமிறங்குகிறார். இருப்பினும் விளையாடும் பந்துகளை சிக்சருக்கு பறக்க விடுகிறார். சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷராக தோனி இந்த ஆண்டு விளையாட உள்ளார். தோனி 7 அல்லது நம்பர் 8 இடத்தில் பேட் செய்ய வாய்ப்புள்ளது.
பவுலிங்
ஐபிஎல் 2025 சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு திரும்பி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அஷ்வின், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கை கொடுக்க முடியும். குறிப்பாக முதல் ஓவர் போடுவதில் சிறப்பாக செயல்படுவார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஓப்பனிங் வீரராகவும் விளையாடினார். மறுபுறம் குஜராத் அணியின் நூர் அஹ்மத்தை யாரும் எதிர்பார்க்காத விலையில் சென்னை 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இவரது பந்துவீச்சு சேப்பாக்கம் மைதானத்தில் நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சிஎஸ்கேயின் வெற்றியில் மதீஷா பத்திரனா முக்கிய பங்கு வகித்துள்ளார். கடந்த சீசனில் பாதியில் காயத்தால் வெளியேறினார். இருப்பினும் இந்த முறை விளையாட உள்ளார். கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் உள்ளனர். பார்ப்பதற்கு பலம் வாய்ந்த அணியாக இருக்கும் சென்னை அணி இந்த ஆண்டாய் எப்படி விளையாட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.