சென்னை தமிழக அரசின் பெருந்தலைவர் காமராசர் விருது கேவி தங்கபாலுவுக்கு அறிவிக்கப்படுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் […]