சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி உள்ளார். பொங்கல் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள, யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் […]