கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கைபப்ற்றி அசத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த தோல்விக்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்த அவர், அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவர் மீது இந்திய ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் இதுதான் அவருக்கு கடைசி டெஸ்ட் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சமீப காலங்களாக பார்மின்றி தவித்து வரும் விராட் கோலிக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை ஸ்டம்புக்கு நேராக வரும் வந்து ஆரம்ப கட்டத்தில் பேடில் அடித்தது. அதுதான் என்னுடைய பலவீனமாகவும் இருந்தது. பின்னர் நான் அதை சரி செய்து கொண்டு எப்படி பந்து வந்தாலும் அதை அனைத்து திசைகளிலும் அடிக்கும் வழியை கண்டுபிடித்தேன்.
அதே போன்று விராட் கோலி தற்போது ஒரு போரில் ஈடுபட்டு வருகிறார். அதுதான் அவருடைய பலவீனமாக இருக்கிறது. எந்த போட்டியாக இருந்தாலும் அவர் ஒரு போர் போன்ற நினைத்து அதில் போராடி வருகின்றார். ஆனால் இனி அப்படியே அந்த மனநிலையில் இருக்கக்கூடாது. ஒவ்வொரு பந்தையும் புதிய பந்தாக நினைத்து விளையாட வேண்டும்.
அவர் கிரிக்கெட்டில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அதிக மணி நேரம் செலவு செய்து மனரீதியாக அவரை மாற்றிக்கொண்டு ஒவ்வொரு பந்திற்கும் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல பார்முக்கு திரும்பலாம்” என்று கூறினார்.