திருவனந்தபூரம் மோசமான வானிலை காரணமாக இலங்கை செல்ல வேண்டிய விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறங்கி உள்ளது/ இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு துருக்கியில் இருந்து புறப்பட்டுச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் 10 விமான பணியாளர்கள் மற்றும் 289 பயணிகள் பயணம் செய்தனர். அதிகாலை விமானம், கொழும்புவை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்கு விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க […]
