அஜித் குமார் ரேஸிங் டீம் துபாய்க்குச் சென்றிருக்கிறது.
நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்’ என்ற குழுவையும் கடந்தாண்டு தொடங்கியிருந்தார்.
துபாயில் இந்தாண்டிற்கான `24H Dubai’ கார் பந்தயம் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அதற்கான பயிற்சியை இன்று துபாய் ஆட்டோடிரோம் ரேஸ் டிராக்கில் தொடங்கியிருக்கிறது அஜித்குமார் ரேஸிங் டீம். அது தொடர்பான புகைப்படங்களும் இன்று அக்குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள்.
பயிற்சிக்காக ரேஸிங் டிராக்கில் அஜித் குமார் ஓட்டிய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அஜித் குமார் பத்திரமாகக் காயமில்லாமல் காரிலிருந்து வெளியேறினார். இது தொடர்பாக அவரின் ரேஸிங் குழு எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “பயிற்சியின்போது அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. அவர் காயமடையாமல் திரும்பிவிட்டார். Another day in the office… that’s racing!.” என ஒரு காணொளியுடன் பதிவிட்டிருக்கிறார்கள்.
விகடன் ஆடியோ புத்தகங்கள்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…