KH 237: அமெரிக்காவில் AI படிப்புடன் ஸ்கிரிப்ட் வொர்க்; ஆரம்பமாகும் அடுத்த அதிரடி

மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வந்த கமல்ஹாசன், அந்த படத்தை முடித்து கொடுத்து விட்டு, ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு பறந்தார். கடந்த நவம்பர் மாதத்தோடு ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றாலும், படம் இந்த ஆண்டும் ஜூன் 5ம் தேதி அன்று தான் திரைக்கு வருகிறது.

அமெரிக்காவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கற்று வரும் கமல்ஹான், விரைவில் சென்னை திரும்புகிறார். அவரது 237-வது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்குகின்றனர்.

கமலுடன்..

கமலின் ‘விக்ரம்’, ‘தக் லைஃப்’ தவிர கமலின் தயாரிப்பில் உருவான ‘அமரன்’ ஆகிய படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர்கள் அன்பறிவ். கமலின் 237வது படத்தை இவர்கள்தான் இயக்குகின்றனர். ”உங்களது படங்கள் பார்த்து தான் வளர்ந்தோம். இப்போது உங்களையே இயக்குகிறோம். இது எங்கள் வாழ்நாள் சாதனை என்பதால், மிகச்சிறந்த உழைப்பைக் கொடுப்போம்” என சிலிர்க்கின்றனர். கடந்த சில மாததிற்கு முன்னர் ஏ.ஐ.தொழில்நுட்பம் கற்பதற்காக பிக் பாஸ் தொகுப்பாளர் பணியையும் உதறிவிட்டு அமெரிக்கா பறந்தார் கமல்.

அங்கே 50 நாட்கள் கோர்ஸ் ஒன்றைப் படித்து வரும் அவர், கடந்த டிசம்பரில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டதைவிட அவரது ஷெட்யூல் நீண்டதால் சென்னை வருகை தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே அன்பறிவ் படத்தின் வேலைகளையும் வேகப்படுத்தினார் கமல்.

தயாரிப்பாளர் மகேந்திரனுடன்..

அமெரிக்காவில் இருந்தவாறே, இயக்குநர்களை அழைத்தவர் அங்கேயே ஸ்கிரிப்ட் ஒர்க்கில் தீவிரமானார். இந்தப் படத்தை கமலுடன் ‘டர்மரிக் மீடியா’ மகேந்திரனும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புராஜெக்ட் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது என்றாலும் அவரவர் கமிட்மென்ட்களால் இந்தாண்டு தான் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு அதிரடியான ஆக்‌ஷன் கதை. ‘விக்ரம்’ போல இதுவும் மல்டி ஸ்டார் படமாக இருக்கலாம் என்கின்றனர்.

சமீபத்தில் அன்பறிவ் ஸ்டன்ட் அமைத்த ‘கேம் சேஞ்சர்ஸ்’ பொங்கலுக்கு வெளியாகிறது. தவிர ‘தக் லைஃப்’, ‘இந்தியன் 3’, ரஜினியின் ‘கூலி’ என கமிட்மென்ட்களை வைத்திருக்கும் அன்பறிவ், அதனை முடித்து கொடுத்துவிட்டே, கமலை வைத்து இயக்கும் படத்திற்கு முழு வீச்சில் வருகிறார்கள். அனேகமாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.