எஸ் ஆர் புரொடக்ஷன் சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ‘ரங்கோலி’ பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்காரன்’.
பொங்கலை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தனது ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார் நடிகர் கலையரசன். மேடையில் பேசிய அவர், “இனிமேல் துணை கதாபாத்திர வேடங்களை அதிகமாகப் பண்ணப்போவதில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இந்த துறையில் நான் ஆரோக்கியமாக இல்லை என்று நினைக்கிறேன்.
எனக்குச் சோறு போட்டதே இந்தத் துணை கதாபாத்திரங்கள்தான். அதை நான் மறக்கவே மாட்டேன். மலையாள சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பெரிய படத்தில் சிறிய கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஆனால் அவர்களை ஹீரோவாக வைத்து இரண்டு மூன்று படங்கள் வெளியாகும். இங்கேயும் அந்த சூழல் இருக்கிறது.
இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் கம்மியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இங்கு ஒரு நடிகர் வில்லனாக நடித்தால் வில்லனாகவேதான் நடிக்க அழைப்பார்கள். அதேபோல சாவு என்றால் வந்தாலே என் பெயரை எழுதிருவார்கள் போல.
இதுவும் ஒரு பஞ்சாயத்தாவே இருக்கிறது. என்னை எப்போதும் செகண்ட் ஹீரோவாகவே தேர்ந்தெடுக்கிறார்கள். இனிமேல் முடிந்த அளவுக்கு லீட் ரோலில் நடிப்பேன்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…