Relaince Jio… தினம் 2GB டேட்டா உடன்… டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவச சந்தா

இன்றைய காலகட்டத்தில், மொபைல் டேட்டா மற்றும் பொழுதுபோக்கின் தேவைகள், ஆகிய இரண்டையும் ஒன்றாக பூர்த்தி செய்யும் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே, வாடிக்கையாளர் தேவையை கருத்தில் கொண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான OTT சேனல்களுக்கான இலவச சந்தா பலன்களை கொண்ட பல திட்டங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும், இதற்கு விதிவிலக்கல்ல. ஜியோ நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உள்ள நிலையில், பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு, நிறுவனம் பல்வேறு விலை வரம்புகளில் பல விதனமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களில், டேட்டா, அழைப்பு மற்றும் SMS உடன் பயனர்களுக்கு OTT செயலிகளுக்கான இலவச சந்தாவை வழங்கும் சில திட்டங்கள் உள்ளன. ஜியோவின் பிரபலமான ரீசார்ஜ் திட்டம் ஒன்றின் மூலம் பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் பலன்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஜியோவின் பாபுலர்  திட்டம்

ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் பல்வேறு விலை வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.  அதில் ரூ.949 ரீசார்ஜ் திட்டத்தை  ஜியோவின் இணையதளத்தில் உள்ள பொழுதுபோக்கு திட்டங்கள் பிரிவில் காணலாம். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், ​​பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுகிறார்கள்.

ரூ.949 ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள்

ரூ.949 ரீசார்ஜ் திட்டத்தில், ஜியோ பயனர்கள் தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியையும் பெறுகின்றனர். இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தம் 168 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வழியில் பயனர்கள் தினசரி 2 ஜிபி கிடைக்கும். மேலும், நீங்கள் 5G ஃபோனைப் பயன்படுத்தினால் மற்றும் 5G நெட்வொர்க் உங்கள் பகுதியில் இருந்தால், நீங்கள் 5G இணையத்தையும் பயன்படுத்தலாம்.

ரூ.949 ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

ரூ.949 ரீசார்ஜ்  திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், இதில், பயனர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் இலவச சந்தாவை 3 மாதங்களுக்கு அதாவது 90 நாட்களுக்குப் பெறுகிறார்கள், இதைத். தவிர, இந்த திட்டத்தில் பயனர் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவையும் பெறுகிறார்.

திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றைப் பார்க்க விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்ததாக இருக்கும். இந்தத் திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், My Jio ஆப் மற்றும் Google Pay, Phone Pay போன்ற ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸ் மூலம்  செய்யலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.