Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து… நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர். 

சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜயா, முத்துவின் நண்பர்கள் என அனைவரும் அங்கு வருகின்றனர். 

அனைவரையும் பார்த்ததும், மனோஜ் அதிர்ச்சியுடன் பார்க்கிறார். முத்து வந்த விஷயத்தை சொல்கிறார்,  அப்பா தான் இனி இந்த ஷோரூமின் ஓனர், நீ மேனஜராக இருந்து கொள் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியாகிறார். முத்து மனோஜை சேரில் இருந்து எழுப்பி அண்ணாமலையை உட்கார வைக்கிறார். 

Siragadikka aasai

அண்ணாமலை மற்றும் விஜயாவிற்கு மாலை அணிவித்து மகிழ்கின்றனர். அண்ணாமலையை கடையில் இருக்கும் ஊழியர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார் முத்து. இது மனோஜுக்கு அவமானமாகிறது. அந்த சமயத்தில் முத்துவின் நண்பர் செல்வம் மனோஜை ஏதோ சொல்ல விஜயா கடுப்பாகிறார்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில், மனோஜுக்கு அதிகளவில் பிஸ்னஸ் கொடுக்கும் சந்தோஷி அங்கு வருகிறார். அதே நேரம் மனோஜிடம் பணம் கொடுத்துவிட்டு பொருள் கிடைக்காமல் இருக்கும் டீலர்கள் அங்கு வந்து பிரச்னை செய்கின்றனர். இதைபார்த்த சந்தோஷி அதிர்ச்சியாகிறார்.

மேலும், அந்த சமயத்திற்கு பிரச்னையை சரிசெய்ய மனோஜை காப்பாற்ற, டீலர்களிடம் பேசி சமாளித்து அனுப்புகிறார் சந்தோஷி.

அதன் பிறகு மனோஜிடம் சந்தோஷி கேள்வி கேட்கிறார். டீலர்களிடம் வாங்கிய பணம் எங்கே என்று கேட்க மனோஜ் திருதிருவென முழிக்கிறார். அந்த பணத்தை வீடு வாங்க கொடுத்து ஏமாந்த விஷயத்தை அண்ணாமலை சொல்ல ஆரம்பிக்க, முத்து தடுக்கிறார்.

முத்து சந்தோஷியிடம் பொறுமையாக நடந்ததை சொல்கிறார். அந்த ஏமாற்றிய நபரை விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொல்கிறார்.

சந்தோஷி இந்த விஷயத்தை கேட்டு மனோஜை கடிந்து கொள்கிறார். இவ்வளவி சீக்கிரம் வீடு வாங்க நினைப்பது தவறு என்கிறார். மனோஜுக்கு அட்வைஸ் செய்கிறார்.

மேலும், முத்துவிற்காவும் உங்கள் அப்பாவிற்காகவும் தான் நான் பொறுமையாக போகிறேன் என்று சந்தோஷி எச்சரித்து விட்டு போகிறார்.

இங்கு முத்து தான் மனோஜை காப்பாற்றி இருக்கிறார் என்பது கூட தெரியாமல் விஜயா வீட்டிற்கு வந்ததும் முத்துவை திட்டுகிறார்.

ரோகிணியும் சந்தோஷி அங்கு வந்தது முத்துவின் பிளான் என்று நினைத்து பேசுகிறார். ஸ்ருதி முத்துவிற்கு ஆதரவாகப் பேசி ரோகிணியை ஆஃப் செய்கிறார். கடந்த சில எபிசோடுகளாக ஸ்ருதி முத்துவிற்கும் மீனாவிற்கும் முழு ஆதரவளித்து விஜயா, ரோகிணியை மூக்குடைப்பது ரசிக்க வைக்கிறது.

இந்த டீலர்ஷிப்பை கேன்சல் செய்யாமல் இருக்க முத்து தான் காரணம் என்று ஸ்ருதி சொல்ல ரோகிணி அமைதியாகிறார்.

வழக்கம் போல விஜயா மீனாப் பக்கம் திரும்ப, மீனா விஜயாவை கலாய்க்கிறார். அத்த அடுத்த வாரம் புயல் வரப்போகுது அதுக்கும் நான் தான் காரணம்னு சொல்வீங்களா? என்று சொல்கிறார்.

மீனா இப்படி பேசியதும் விஜயாவிற்கு அவமானம் தாங்காமல் ரோகிணி மீது அந்த கோபத்தை காட்டுகிறார். உங்களால தான நான் அவமானப்பட்டு நிற்கிறேன் என்று கடிந்து கொள்கிறார். ரோகிணி அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்க வேண்டும் என்றும் விஜயா சொல்கிறார்.

சுத்தி சுத்தி நம்மக்கிட்டயே வர்றாங்களே என்பது போல் ரோகிணி பதட்டமாகிறார். இந்த வாரம் எப்படியும் முத்து மனோஜை ஏமாற்றியவரை கண்டுபிடித்து விடுவார். ஆனால் அப்போதும் ரோகிணி, விஜயா, மனோஜ் முத்துவை புரிந்து கொள்ளமாட்டார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.