Trisha: `மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு..!’ – த்ரிஷா

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்து, த்ரிஷா மற்றும் வினய் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஜனவரி 2-ம் தேதி வெளியான திரைப்படம் தான் ஐடென்டிட்டி (IDENTITY).

க்ரைம் த்ரில்லர் பாணியிலான இந்த திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்களிைடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகை த்ரிஷா, ” நான் இதுக்கு முன்னாடி நிறைய படங்கள் வெளியீட்டின் போது உங்கள எல்லாம் சந்திச்சுருக்கேன். ஆனால் இப்போ எனக்கு ரொம்ப ஸ்பெஷல், ஏன்னா முதல் முறை மலையாளப் படத்திற்காக சந்திக்கிறேன். என்னோட கரியர்ல எனக்கு எப்பவுமே மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கு. அவங்க படம் எல்லாம் ரொம்ப வித்தியாசமா, புத்திசாலித்தனமா இருக்கும். ஒரு வருஷத்துக்கு ஒரு மலையாளப் படமாவது நடிக்கணும்னு இருந்தேன். சரியான நேரத்துல இயக்குநர் அகிலை சந்திச்சேன். அவர் கதை சொன்ன விதம் ரொம்பவே அருமையா இருந்துச்சு. டொவினோ பத்தி கேக்கவே வேணாம் அவர் தான் ‘லக்கி ஸ்டார் ஆஃப் கேரளா (LUCKY STAR OF KERALA)’. வினையும் நானும் `என்றென்றும் புன்னகை’ படத்துல இருந்தே நண்பர்கள்.

Identity Team

அந்தப் படம் லவ், ஃபிரெண்ட்ஸ் என அது ஒரு டிராக், இது அதுல இருந்து அப்படியே வித்தியாசமான டிராக். எப்பவும் படம் எடுக்கும் போது அந்த இடம் ஜாலியா இருந்தாலே அது நல்லா இருக்கும். பாதிக் களம் ஜெயிச்ச மாதிரி தான் என நான் எப்பவும் சொல்லுவேன். அப்படி தான் இந்தப் படமும் ஷூட்டிங்கில் இருந்தே நல்ல ஜாலியாதான் இருந்துச்சு .

நான் நல்லா என்ஜாய் பண்ணேன். படம் வெளிவந்த பிறகு அதோட ரெஸ்பான்ஸ் ,ரிசல்ட் எல்லாம் எப்படி அமையும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனா இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்கள் தான் பெற்று வருது. இப்போ தமிழ்நாட்டுலயும் நல்ல ரெஸ்பான்ஸ் வருது, ஸ்க்ரீன்ஸ் அதிகப்படுத்திட்டு வருவதா சொன்னாங்க, அது கூடுதல் சந்தோஷம்

Tovino Thomas & Trisha

எப்போதுமே மலையாளம் மற்றும் தமிழ் சினிமாத்துறை ஒன்றோட ஒன்று இணைக்கப்பட்டது போல தான் எனக்கு இருக்கும். ஏன்னா மோகன்லால் சார், மம்முட்டி சார் ,நிவின் பாலி இவங்க எல்லாரும் தமிழ்ல தொடர்புல தான் இருக்காங்க. இங்க இருக்குற நடிகர்களும் அப்படி தான் இருந்து வர்றாங்க. இங்க இருக்கும் நடிகர்கள் மலையாள சினிமா அதிகம் பார்கிறாங்க. அது ரொம்ப நல்ல விஷயம். இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு . புத்தாண்டை வெற்றியோட தொடங்குவதில் மகிழ்ச்சி” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.