டெல்லி நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட விதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம அளித்துள்ளனர். மத்திய அரசு மக்களவை தேர்தலையும், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே சமயத்தில் நடத்துவதில் முனைப்பு காட்டி வருதால் இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு அரசியலமைப்பு (129-வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இரண்டு சட்ட மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து கடந்த மாதம் […]
