குடியரசு தினத்திற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளமான அமேசான் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025 (Amazon Great Republic Day sale 2025) ஜனவரி 13 அன்று தொடங்கும். இதில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 75% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் கேமிங் லேப்டாப் முதல் புளூடூத் இயர்பட்கள் தவிர, எலக்ட்ரானிக் ஆக்சஸெரீஸ்களை சலுகை விலையில் வாங்குவதற்கு அமேசான் சலுகை விற்பனை சிறந்த தேர்வாக இருக்கும். உடனடியாக உங்கள் ஷாப்பிங் பட்டியலை தயார் செய்யுங்கள். அமேசான் குடியரசு தின விற்பனையில் ஷாப்பிங் செய்யும் போது, நீங்கள் SBI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, இந்த அட்டை மூலம் EMI பரிவர்த்தனை செய்தால், 10% வரை உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.
ஸ்மார்போன்களில் பம்பர் சலுகைகள்
அமேசானின் கிரேட் குடியரசு தின சலுகை விற்பனையில் ஆப்பிள், iQOO, OnePlus, Samsung மற்றும் Xiaomi போன்ற பிராண்டுகளின் மொபைல் போன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாகங்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 13, OnePlus 13R, iQOO 13, iPhone 15 மற்றும் Galaxy M35 போன்ற போன்களுக்கும் தள்ளுபடிகள் உண்டு. , அதே நேரத்தில் Galaxy S23 Ultra, Honor 200 மற்றும் Realme Narzo N61 போன்களையும் நல்ல விலையில் வாங்கலாம்.
மடிக்கணினிகள் மற்றும் கேமிங் மடிக்கணினிகளில் சிறந்த சலுகைகள்
குடியரசு தின விற்பனையின் போது நீங்கள் புதிய லேப்டாப்பை வாங்க திட்டமிட்டால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும், ஏனெனில் அமேசான் பம்பர் சலுகைகளுடன் கூடிய கேமிங் லேப்டாப்களின் பட்டியலையும் அதிகரித்து வருகிறது. இந்த சலுகை விற்பனையில் நீங்கள் சிறந்த பிராண்ட் லேப்டாப்களை 45% வரை தள்ளுபடியில் பெறுவீர்கள்.
வீட்டு உபயோகப் பொருட்களில் பம்பர் சலுகைகள்
அமேசான் ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புரொஜெக்டர்கள் ஆகியவற்றில் 65 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது, அதே சமயம் இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் மைஸ்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் ரூ.199 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அலெக்சா மற்றும் ஃபயர் டிவி தயாரிப்புகளை ரூ.2,599க்கு நிறுவனம் சலுகை விற்பனை செய்யும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் துணைக்கருவிகளுக்கு பம்பர் ஆஃபர்
மடிக்கணினிகள் – 40% வரை தள்ளுபடி
டேப்லெட்டுகள் – 60% வரை தள்ளுபடி
ஹெட்ஃபோன்கள் – 75% வரை தள்ளுபடி
கணினி துணைக்கருவிகள் – 75% வரை தள்ளுபடி
சவுண்ட்பார் ஸ்பீக்கர்கள் – 60% வரை தள்ளுபடி
கேமராக்கள் – 80% வரை தள்ளுபடி
ஸ்மார்ட்வாட்ச்களில் 80% வரை தள்ளுபடி