இந்தியா வரவுள்ள 2025 ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் அறிமுகமானது.!

ஸ்கோடா ஆட்டோவின் 2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட என்யாக் (Enyaq) கூபே ரக எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு கூடுதலான ரேஞ்ச் மற்றும் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான மாடலாக என்யாக விளங்குகின்றது.

முந்தைய மாடலை விட என்யாக் மற்றும் என்யாக் கூபே என இரண்டின் ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்தப்பட்டுள்ளதால் சிறப்பான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைய முக்கிய காரணமே ஸ்கோடா நிறுவனத்தின் புதிய Modern Solid design தாத்பரியத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டதே ஆகும். இதன் மூலம் என்யாக்கின் டிராக் கோ எஃபெசியன்ட் (drag coefficient) முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் 0.264 இலிருந்து 0.245 ஆகவும், என்யாக் கூபேவுக்கு 0.234 இலிருந்து 0.225 ஆகவும் குறைந்துள்ளது.

Enyaq பேட்டரி மற்றும் ரேஞ்ச் விபரம்

ஆல் வீல் டிரைவ் பெற்று அதிகபட்சமாக 210Kw (282hp) மற்றும் 545Nm டார்க் வெளிப்படுத்தும் 77 kWh பேட்டரி திறன் கொண்ட Enyaq 85x மாடலின் முந்தைய மாடல் 562 கிலோமீட்டர் வரை (WLTP) ரேஞ்ச் கொண்டிருந்த நிலையில் புதிய தொழில்நுட்பத்துடன் தற்பொழுது 588 கிலோமீட்டர் வரை வழங்குகிறது. இந்த வேரியண்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகவும், 0-100 கிமீ எட்ட வெறும் 6.7 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

என்யாக் கூபே மாடலில் ரியர் வீல் டிரைவ் உள்ள அதிகபட்சமாக 210Kw (282hp) மற்றும் 545Nm டார்க் வெளிப்படுத்தும் 77 kWh பேட்டரி திறன் கொண்ட Enyaq 85 Coupé மாடலின் முந்தைய 570 கிலோமீட்டரிலிருந்து 597 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இந்த வேரியண்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகவும், 0-100 கிமீ எட்ட வெறும் 6.7 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

ரியர் வீல் டிரைவ் உள்ள அதிகபட்சமாக 150Kw (201hp) மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்தும் 59 kWh பேட்டரி திறன் கொண்ட Enyaq 60 Coupé மாடலின் 439 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும். இந்த வேரியண்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆகவும், 0-100 கிமீ எட்ட வெறும் 8.1 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.


skoda Enyaq electric car dashboard

இன்டீரியரில் மிக நேரத்தியான நிறத்தை கொண்ட டேஸ்போர்டில் 5 அங்குல கிளஸ்ட்டர் மற்றும் 13 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன், ADAS, ரிமோட் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

என்யாக் காரில் 585 லிட்டர் பூட்ஸ்பேஸ் மற்றும் 1,710 லிட்டர் ஆக விரிவுப்படுத்த இருக்கைகளை மடித்து வைத்தால் கிடைக்கும். அதே நேரத்தில் என்யாக் கூபே 570 லிட்டர் மற்றும் 1,610 லிட்டர் வரை இருக்கைகளை மடிக்கும்போது கிடைக்கும்.

புதிய டெக் டெக் முகப்பினை கொண்டுள்ள என்யாக் இந்திய சந்தையில் 2025 பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு அனேகமாக நடப்பு ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.


2025 skoda Enyaq electric side view

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.