சென்னை; இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்துக் கூறி உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைவராக நாராயணன் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். வரும் (ஜன.) 14ம் தேதி இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பொறுப்பேற்க இருக்கிறார். அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் […]