சென்னை: சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ள அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தநிலையில், வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, நெல்லை – சென்னை – நெல்லை வந்தேபாரத் ரயிலில் […]