பாகிஸ்தான்: 6 சகோதரிகளை திருமணம் செய்த 6 சகோதரர்கள்

பஞ்சாப்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆச்சரியப்படும் வகையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. இதன்படி, 6 சகோதரர்கள் மணமக்கள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்காமல் 6 சகோதரிகளை திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. 100 விருந்தினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிய போதனைகளின்படி, திருமணத்தில் எளிமையை கடைப்பிடிக்க மணமகன்கள் விரும்பியுள்ளனர். அவர்களில் மூத்த சகோதரர் கூறும்போது, நாங்கள் எடுத்துக்காட்டாக இருக்க விரும்பினோம்.

சில இடங்களில் திருமண செலவுகளுக்காக மக்கள் நிலங்களை விற்கின்றனர். அல்லது கடன் வாங்குகின்றனர். ஆனால், திருமணங்கள் எளிமையானவை என காண்பிக்கவும், தேவையற்ற நிதி நெருக்கடியில் சிக்க வேண்டாம் என எடுத்து காட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார்.

சமூக நடைமுறைகளுக்கு மாறாக, மணமகள் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். இந்த திருமணம் அதிக செலவில்லாமல், குறைந்த செலவில் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்காக மணமகன்கள் ஓராண்டாக திட்டமிட்டு வந்துள்ளனர். ஏனெனில், அவர்களின் இளைய சகோதரன் 18 வயது நிறைவடைந்த பின்னர் ஒரே நாளில் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்திருந்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.