மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த போட்டிகளில் தங்களது காளைகளை இறக்க, 12632 காளைகளையும் அதன் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். நடப்பாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ஜ்ல்லிக்கட்டு போட்டி ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கி உள்ள உலக புகழ்பெற்ற போட்டிகள் நடைபெறும் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகள் குறித்த தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜன. 14ல் […]