பஜாஜ் ஆட்டோவின் பிரபலமான ஃபேரிங் ஸ்டைல் பல்சர் RS200 மிக நீண்ட காலத்துக்கு இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட மாடலாக வெளியிடப்பட உள்ள நிலையில் சிறிய ஸ்டைல் மாற்றங்களை பெற்று கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றுள்ளது. புதிய பல்சர் ஆர்எஸ் 200யின் விலை அனேகமாக ஜனவரி 9 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எஞ்சின் பவர் மற்றும் டார்க் விபரங்களில் எந்த மாற்றமும் இருக்காது தொடர்ந்து, ஆர்எஸ் 200 பைக்கில் 24 bhp பவரை வழங்கும் 199.5cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 18.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
மற்றபடி, மெக்கானிக்கல் மாற்றங்களும் இருக்காது தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று 17 அங்குல வீல் கொண்டு முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க், உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
2025யின் முக்கிய மாற்றங்களாக புதிய நிறங்களுடன் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ், புதிய எல்சிடி கிளஸ்ட்டர் மற்ற பல்சர் பைக்குகளில் உள்ளதை போன்றே கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடுதலாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்க டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் சிறிய அளவிலான மாற்றங்களுடன், புதிய டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையிலான படங்கள் கிடைத்துள்ளன.
புதிய 2025 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 விலை ரூ.1.77 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.