Hansika Motwani: `குடும்ப வன்முறை' -ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை!

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 498-A, 323, 504, 506, 34 ஆகியவற்றின் கீழ் நடிகை ஹன்ஸிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரசாந்த் மோத்வானி – முஸ்கன் நான்சி ஜேம்ஸ்

அந்தப் புகாரில்,“என் கணவரும், அவருடைய அம்மா மோனா மோத்வானி, அவரது சகோதரி ஹன்சிகா மோத்வானி ஆகியோர் என்னிடம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டார்கள். என் தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் இருவரும் தலையிட்டு என் கணவருடனான உறவில் சிக்கலை ஏற்படுத்தினார்கள். அதனால் தாக்குதலுக்குள்ளான நான், பெல்ஸ் பால்சி (முகத்தின் ஒரு பக்கத்திலுள்ள தசைகள் தற்காலிக பலவீனம் அல்லது செயலிழப்பது) நோயால் பாதிக்கப்பட்டிருக்கறேன். மூவரும் விலையுயர்ந்த பொருள்களை கேட்கிறார்கள். சொத்து விவகாரத்தில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் மோத்வானி, “நான் இப்போது சட்ட உதவியை நாடியுள்ளேன். இந்த கட்டத்தில், மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.