திருமண வரவேற்பு உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா…அதிர்ச்சி சம்பவம்

மும்பை,

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்துவிட்டு மணமகளின் தாய்மாமா மகேஷ் பாட்டீல் என்பவர் தப்பியோடியதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உணவில் விஷம் கலந்து இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ் பாட்டீலை தேடி வருகின்றனர்.

மகேஷின் எதிர்ப்பை மீறி, சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டதை மண்டபத்தில் இருந்த சில உறவினர்கள் பார்த்ததால், அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.