பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநில காவல்துறை மகாகும்பமேளாவில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மகாகும்பமேளா’ உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. ‘மகா கும்பமேளா 2025’ வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை தீவிரமாக […]