டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என மத்தியஅரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை பெரியாறு அணை விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கிடையில், மத்தியஅரசு ‘அணை பாதுகாப்பு மசோதா (2019)’ கொண்டு வந்து அதை நிறைவேற்றியது. அதன்படி, அணை உடைவது தொடர்பான பேரிடர்களைத் தடுக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைத்து பெரிய அணைகளின் போதுமான கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு […]