சென்னை: யுஜிசியின் புதிய வரைவுக்கு எதிரான முதல்வரின் தனி தீர்மானத்தை எதிர்த்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “யுஜிசி வரைவு குறித்து கருத்து தெரிவிக்க மாநில அரசுக்கு பிப்.5-ம் தேதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நீக்க வேண்டிய அம்சங்கள் தொடர்பாக கோரிக்கை வைக்கலாம். அதற்குள்ளாக தீர்மானம் கொண்டு வருவது சரியானதல்ல என்பதால் வெளிநடப்பு செய்தோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மொடக்குறிச்சி எம் எல் ஏ சரஸ்வதி கூறும்போது, “மொடக்குறிச்சி நாகபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் பள்ளிகளில் போதிய வகுப்பறைகள் இல்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் மதுபிரியர்கள் இரவு நேரத்தில் மது அருந்துகின்றனர். பள்ளி நேரத்தில் போதிய பேருந்து வசதி இல்லை என கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.