Reliance Jio Special Recharge Plan: ரிலையன்ஸ் ஜியோ தற்போது 490 மில்லியன் பயனர்களுடன் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. இந்நிலையில், ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த, நிறுவனம் அடிக்கடி புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. பெரும்பாலான செய்திகள் புதிய திட்டங்கள் பற்றியே இருக்கும். ஆனால், ஜியோ விரைவில் நிறுத்தப்போகும் திட்டத்தைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம்.
புத்தாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ரீசார்ஜ் திட்டம்
கடந்த டிசம்பரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது. பயனர்கள் இதில் நிறைய நன்மைகளைப் பெற்றனர். ஆனால் தற்போது இந்த திட்டம் விரைவில் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
ஜியோவின் 200 நாள் திட்டம்
டிசம்பர் 11, 2024 அன்று, ஜியோ 2025 ரூபாய்க்கான மலிவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்பட்டது மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 200 நாட்கள்.
200 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா
நீங்கள் ஜியோ பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் பெற விரும்புகிறீர்கள் என்றால், இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் 200 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதிக இணைய தரவு தேவைப்படும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஏனெனில் இந்த திட்டத்தில், 200 நாட்களுக்கு 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது, அதாவது ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி வரை அதிவேக டேட்டாவைப் பயன்படுத்தலாம்.
ஜனவரி 11 வரை அமலில் உள்ள திட்டம்
ஆனால் இதில் ரீசார்ஜ் செய்வதற்கான கால அவகாசம் மிகவும் குறைவு! இந்த ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், இன்றே அதை விரைவாகச் செய்யுங்கள். இந்த திட்டம் 2025, ஜனவரி 11ம் தேதி வரை மட்டுமே இதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு ஜியோ இந்த திட்டத்தை வழங்காது. எனினும் அதன் பிறகு நீங்கள் நீண்ட காலம் செல்லுபடியாகும் பல திட்டங்களின் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.