ரூ.28,000 வரை சிட்ரோன் பாசால்ட் எஸ்யூவி விலை உயர்ந்தது

இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கின்ற கூபே ஸ்டைல் மாடலான சிட்ரோன் நிறுவனத்தின் பாசால்ட் எஸ்யூவி காரின் வேரியன்ட் வாரியாக விலை உயர்த்தப்பட்டு அதிகபட்சமாக ரூபாய் 28,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய சந்தையில் டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் இந்த மாடலின் விலை முன்பாக 7.99 லட்சத்தில் துவங்கிய நிலையில் தற்பொழுது 8.25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் டர்போ ஆரம்ப நிலை வேரியண்ட் அதிகபட்சமாக 28,000 வரை விலை உயர்த்தப்பட்டு, டாப் மாடலின் விலை அதிகபட்சமாக 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய 2025 சிட்ரோயன் பாசால்ட் விலைப்பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது

Variants New Price
1.2 Petrol You Rs 8.25 lakh
1.2 Petrol Plus Rs 9.99 lakh
1.2 Turbo Plus Rs 11.77 lakh
1.2 Turbo Plus AT Rs 13.07 Lakh
1.2 Turbo Max Rs 12.49 lakh
1.2 Turbo Max DT Rs 12.70 lakh
1.2 Turbo Max AT Rs 13.79 lakh
1.2 Turbo Max DT Rs 13.99 lakh

BNCAP கிராஸ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற இந்த காரில் ஆறு ஏர்பேக்குகள் பல்வேறு அடிப்படையான பாதுகாப்ப அம்சங்களை மட்டுமே பெற்று இருக்கின்ற இந்த காரில் கூடுதலாக எந்த பெரிய நவீன தலைமுறையினர் விரும்பும் வசதிகள் இல்லை என்றாலும் சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை கொண்ட காராக விளங்குகின்றது.

1.2 லிட்டர் Puertech 82 NA எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில், 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205Nm டார்க்கினை ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.