2025 ஆம் ஆண்டிற்கான புதிய சுசூகி ஜிக்ஸர் 250 மற்றும் ஃபேரிங் ஸ்டைல் ஜிக்ஸர் SF 250 என இரண்டிலும் OBD-2B ஆதரவினை பெற்ற எஞ்சினுடன் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1.98 லட்சம் முதல் ரூ.2.07 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு 250சிசி பைக்குகளும் புதிதாக மெட்டாலிக் மேட் பிளாக் எண். 2, மெட்டாலிக் மேட் பிளாக் எண்.2/ மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட், மற்றும் மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ/பேர்ல் கிளேசியர் ஒயிட் என மூன்று நிறங்களை கொண்டதாக வந்துள்ளது.
மற்றபடி, அடிப்படையாக எந்த மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 17 அங்குல வீல் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்குகின்றது.
OBD-2B ஆதரவினை பெற்ற 249cc எஞ்சின், 9,300 rpm-ல் அதிகபட்சமாக 26.5ps பவரையும், 7,300 rpm-ல் அதிகபட்சமாக 22.2 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுசுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS) மற்றும் சுஸுகி ஈக்கோ பெர்ஃபாமன்ஸ் (SEP) தொழில்நுட்பங்கள் இடம் பெறுகின்றன.
இதுதவிர இந்நிறுவனம், சுசூகி ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF, V-Strom SX அட்வென்ச்சர் மாடலையும் புதுப்பித்துள்ளது.