43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.12 ஆயிரம்… அமேசானில் குவிந்து கிடக்கும் ஆப்பர்கள்!

Amazon Offer Smart TV: புத்தாண்டில் பழைய ஸ்மார்ட் டிவி தூக்கி எறிந்துவிட்டு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கானதுதான் இந்த செய்தி. அமேசான் தற்போது புத்தாண்டை ஒட்டி கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தள்ளுபடிகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் உங்கள் வீட்டையே ஒரு குட்டி திரையரங்கமாகவே மாற்றலாம்.

அமேசான் தள்ளுபடிகளில் பல முன்னணி நிறுவனங்களின் தொலைக்காட்சிகளும் விற்பனைக்கு உள்ளன. Xiaomi, TCL, Samsung, Acer, Sony, LG போன்ற முன்னணி நிறுவன்களின் தொலைக்காட்சிகள் பெரியளவில் தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில் நேரடி தள்ளுபடிகள் மட்டுமின்றி வங்கி ஆப்பர்கள், எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. எனவே நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கு லேட்டஸ்ட் அம்சங்கள் பொருந்திய ஸ்மார்ட் டிவியை வாங்கிச் செல்லலாம். 

அந்த வகையில் அமேசான் ஆப்பரில் இருக்கும் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

TCL 43-Inch Metallic Bezel-Less Smart TV

இது 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த 43-இன்ச் டிவி வழக்கமாக 52 ஆயிரத்து 990 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால், தற்போது 59 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. வெறும் 21 ஆயிரத்து 990 ரூபாய் விலையில் கிடைக்கிறது. 

குறிப்பாக, 43 அங்குலத்தில் மட்டுமின்றி இந்த மாடல் 65 அங்குலம் மற்றும் 75 அங்குலம் என இரண்டு டிஸ்பிளே ஆப்ஷன்களுடன் வருகிறது. மேலும், 24W ஒலி அவுட்புட், 3 HDMI போர்ட்கள், ஒரு USB போர்ட், ஒரு ஈதர்நெட் போர்ட் மற்றும் ஒரு ஹெட்ஃபோன் அவுட்புட் ஆகியவற்றையும் வழங்குகிறது.ட

Toshiba 43-Inch 4K Ultra smart TV

இந்த டிவியின் அசல் விலை 44 ஆயிரத்து 999 ரூபாய் விலையில் கிடைக்கும். மேலும், 44 சதவீத தள்ளுபடியுடன் வருகிறது. இதன் மூலம் நீங்கள் 24 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி தள்ளுபடியையும் நீங்கள் பெறலாம். இந்த மாடலில் 3 HDMI போர்ட்கள், கூடுதல் USB இணைப்பு, திடமான 24W ஒலி அவுட்புட் ஆகியவை அடங்கும்.

TCL 40-Inch Metallic Bezel-Less Smart TV

இந்த மாடல் 40-இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. இது 2 HDMI போர்ட்கள் மற்றும் ஒரு USB போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 35 ஆயிரம் 990 ரூபாய் விலையில் ஆகும். தற்போது 53 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது, எனவே நீங்கள் இதனை 16 ஆயிரத்து 990 ரூபாய்க்கு பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு அமேசான் ரூ.2 ஆயிரம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

Acer 43-Inch I Pro Series 4K Smart TV

இந்த ஸ்மார்ட் டிவி 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. டூயல்-பேண்ட் வைஃபையையும் இதில் பயன்படுத்தலாம். இணைப்புக்காக 3 HDMI போர்ட்களுடன் பல USB போர்ட்களும் இதில் உள்ளன. மேலும், இதில் டால்பி விஷன் ஆதரவுடன் 30W ஒலி அவுட்புட்டை கொண்டுள்ளது. இதன் விலை 46 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். தற்போது இதற்கு 53 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் டிவியின் விலை 21 ஆயிரத்து 999 ரூபாயிலேயே வாங்கலாம்.

Skyfall 43-Inch HD LED Smart TV

நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சியை வாங்க நினைத்தால், இந்த மாடல் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப விலை 33 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும். இப்போது 61% தள்ளுபடி கிடைக்கிறது. எனவே, இதனை 12 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். மேலும், கூடுதலாக அமேசான் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

மேலும் படிக்க | அமேசானின் குடியரசு தின சலுகை விற்பனை 2025…. எலக்ட்ரானிக்ஸ் மீது 75% வரை தள்ளுபடி
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.