Boby Chemmanur: நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகாரில் போபி செம்மண்ணூர் கைது; அடுத்த நடவடிக்கை என்ன?

கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ஹனி ரோஸ். இவர் நகைக்கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த சில நாட்களாகக் குற்றம்சாட்டி வருகிறார்.

தொழில் அதிபர் போபி செம்மண்ணூர் பொது மேடையில் வைத்து பெண்மையைக் களங்கப்படுத்தும் விதமாகவும், தொடர்ச்சியாக ஆபாசமாக விமர்சித்ததாகவும் எர்ணாகுளம் செண்ட்ரல் போலீஸில் புகார் அளித்திருந்தார். 2024 ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோழிக்கோட்டில் நகைக்கடை திறப்புவிழாவுக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த சமயத்தில் போபி செம்மண்ணூர் தனக்கு நெக்லஸ் அணிவித்ததுடன், கையைப் பிடித்துச் சுற்றினார் எனவும் புகாரில் கூறியிருந்தார். தன்னையும், வேறு பெண்களை ஆபாசமாக கமெண்ட் அடிக்கும் வீடியோவையும் ஹனி ரோஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.

தொழிலதிபர் போபிசெம்மண்ணூர்
தொழிலதிபர் போபிசெம்மண்ணூர்

நடிகை ஹனி ரோஸ் புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் போபி செம்மண்ணூர் மீது நேற்று முன்தினம் (ஜனவரி 7) போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பெண்மையைக் களங்கப்படுத்துதல், ஐ.டி., ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தான் தவறான எண்ணத்துடன் நடிகையை அணுகவில்லை எனவும். திறப்புவிழாவுக்கு வரும்போது நகைகள் அணிவிப்பதும், கையில் வளையல் போடுவதும் பலமுறை செய்துள்ளேன். நான் மோசமான எண்ணத்துடன் அதைச் செய்யவில்லை எனவும் மீடியாகளிடம் விளக்கம் அளித்திருந்தார்.

போபி செம்மண்ணூரை கைதுசெய்து அழைத்துச் செல்லும் போலீஸார்
போபி செம்மண்ணூரை கைதுசெய்து அழைத்துச் செல்லும் போலீஸார்

இதற்கிடையே போபி செம்மண்ணூருக்கு எதிராக நடிகை ஹனி ரோஸ் எர்ணாகுளம் ஜுடீசியல் பஸ்ட் கிளாஸ் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தொழிலதிபர் போபி செம்மண்ணூர் நேற்று (ஜனவரி 8) வயநாட்டில் உள்ள ரிசாட்டில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டுச் சென்றபோது போலீஸார் கைது செய்தனர். இரவு ஆகிவிட்டதால் இன்று (ஜனவரி 9) போபி செம்மண்ணூரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Vikatan Audio Books

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க… எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க… ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க… இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.

இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!

இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.