Letterboxd: `மெய்யழகன், வாழை, மகாராஜா, லப்பர் பந்து’ – உலகளவில் கவனம் பெற்ற தமிழ் திரைப்படங்கள்

உலகம் முழுவதும் பல மில்லியன் சினிமா ரசிகர்கள் ‘லெட்டர் பாக்ஸ்ட்’ (Letterboxed) செயலியைப் பயன்படுத்துகின்றனர். தேடித் தேடி திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இது இரைகள் செழித்த சினிமா காடு, எல்லையில்லாமல் வேட்டையாடலாம்!

சினிமா ரசிகர்கள், அவர்கள் பார்க்கும் திரைப்படங்களை இதில் பட்டியலிட்டு மதிப்பெண் வழங்கி, தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.

2024-ம் ஆண்டுக்கான லெட்டர் பாக்ஸ்ட் அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் பிரபலமான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் டூன் 2 (Dune 2). இந்த வரிசையில் 13வது இடத்தில் இடம்பெற்றுள்ளது `மெய்யழகன்’ திரைப்படம்.

அதிக ரேட்டிங் பெற்ற ஆக்‌ஷன்/அட்வன்சர் திரைப்படங்களின் வரிசையிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது `டூன் 2’. இந்த வரிசையில் 3வது இடத்தைப் பிடித்திருக்கிறரு `மஞ்சுமல் பாய்ஸ்’ மற்றும் 5வது இடத்தைப் பிடித்திருப்பது `ஆவேஷம்’. 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது விஜய் சேதுபதியின் `மகாராஜா’.

Top Rated Action / Adventure Movies

அதிக ரேட்டிங் பெற்ற காமடி படங்கள் வரிசையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது ஆமிர்கான் தயாரித்த லபடா லேடிஸ் திரைப்படம்.

அதிக ரேட்டிங் பெற்ற ட்ராமா திரைப்படங்கள் வரிசையில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது How to make millions before grandma die என்ற தாய்லாந்து திரைப்படம்.

அதிக ரேட்டிங் பெற்ற ஹாரர் திரைப்பட வரிசையில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது மம்முட்டி நடித்த பிரம்மயுகம் திரைப்படம். உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட சப்ஸ்டன்ஸ் திரைப்படம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

அதிக ரேட்டிங் பெற்ற ரொமாண்டிக் திரைப்படங்கள் வரிசையில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது லப்பர் பந்து திரைப்படம். ஸ்போர்ட்ஸ் பிரிவில் இது 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

High Rated Romantic Movies

அதிக ரேட்டிங் பெற்ற சயின்ஸ்-ஃபிக்‌ஷன் பிரிவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை முறையே டூன் மற்றும் சப்ஸ்டன்ஸ் படங்கள் பெற்றுள்ளன. மார்வெல்லின் டெட்பூல் & வுல்வொரின் திரைப்படம் 7ம் இடத்தைப் பெற்றுள்ளது.

பெண் இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியாகி, அதிக ரேட்டிங் பெற்ற படங்கள் பட்டியலில் லபடா லேடிஸ் மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பெண் அறிமுக இயக்குநர்கள் இயக்கிய படங்களின் வரிசையில் ஆல் வி இமாஜின் அஸ் லைட் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

High Rated Asian Films

அதிக ரேட்டிங் பெற்ற ஆசிய படங்கள் வரிசையில் பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் 4வது இடத்தையும் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் 9வது இடத்தையும் பெற்றுள்ளது.

மலையாள திரைப்படங்களான மஞ்சுமல் பாய்ஸ் மற்றும் கிஷ்கிந்தா காண்டம் முறையே 7 மற்றும் 8வது இடங்களைப் பிடித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.