ஜனவரி 17 ஆம் தேதி துவங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரத்தியேகமான ஆடம்பர கார்களுக்கான எம்ஜி செலக்ட் மூலம் எம்9 மற்றும் சைபர்ஸ்டெர் என இருமாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு சைபர்ஸ்டெர் உடனடியாக விற்பனைக்கு வரவுள்ளது.
லிமோசின் ரக எம்பிவி எம்9 சற்று தாமதமாக மார்ச் 2025ல் விற்பனைக்கு வெளியிடப்பட்டு நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான 12 நகரங்களில் கிடைக்க உள்ளது. படிப்படியாக எம்ஜி செலக்ட் டீலர்களை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மசாஜ் இருக்கை உட்பட மிக ஆடம்பரமான வசதிகளை பெற்ற 7 இருக்கை எம்ஜி M9 எலெக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 245hp மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்ச ரேஞ்ச் 430km வரை கிடைக்கும் என WLTP உறுதிப்படுத்தியுள்ளது.
கியா கார்னிவல், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற 5 மீட்டருக்கு அதிக நீளம் கொண்ட கார்களை எதிர்கொள்ளும் எம்ஜி எம்9 நீளம் 5.2 மீட்டர், 2 மீட்டர் அகலம் மற்றும் 1.8 மீட்டர் உயரம் பெற்று 7 இருக்கைகளுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள், இணையம் சார்ந்த சேவைகளுடன் மிகவும் தாராளமான இடவசதியை கொண்டிருக்கும், சர்வதேச அளவில் சில நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் கிடைத்தாலும் இந்திய சந்தைக்கு எலெக்ட்ரிக் மாடலாக ரூ.70 லட்சம் விலைக்குள் வரக்கூடும்.