சென்னை: ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று சட்டபேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான […]