பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக் கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ் சாலையில், சென்னை யிலிருந்து இருந்து சுமார் 45 கி. மீ. தொலைவில் பெரிய பாளையம் உள்ளது. பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்று பொருள். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார். மூலஸ்தானத்தில், பவானி அம்மன், மேலிரண்டு கைகளில் சங்கு, சக்கரங்கள் தரித்தும், கீழிரண்டு கைகளில் வாள் மற்றும் அமிர்த […]