சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டசபை 5 ஆவது நாள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, ”சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தப்போவது இல்லை. ஆகவே மாநில அரசு அதனை நடத்த வேண்டும் என நாங்கள் […]