சென்னை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை தொடரின் இன்றைய 5வது நாள் கூட்டத்தில் முதல்ர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் விபரம் பின்வருமாறு; எடப்பாடி பழனிசாமி: தமிழ்த்தாய் வாழ்த்தை நேரலையில் காட்டவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவ்வளவுதான் மரியாதையா? சபாநாயகர்: இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக […]