சென்னை: தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, நெல் மூட்டைகள விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் மூட்டைக்கு ரூ. 50 வீதம் கையூட்டு பெறுவதை தடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறந்து,. நெல்லுக்கான ஈரப்பதத்தை 18 விழுக்காட்டில் இருந்து 21% ஆக அதிகரிக்க வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]