Virat Kohli is also responsible for Yuvraj’s retirement: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவரது பங்கு இந்திய அணிக்கு எப்பொழுதும் இருந்துள்ளது. இவர் 2011 ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று இந்தியாவிற்கு திரும்பிய அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடினார். 2017 சாம்பியன் டிராபிற்கு பிறகு தேர்வுக்குழுவால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில், யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு விராட் கோலியும் ஒருவகை காரணம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
லாலன்டாப் நேர்காணலில் உத்தப்பா
அவர் கூறியதாவது, யுவி பா-வின் உதாரணத்தை எடுத்து கொள்ளுங்கள் அவர் புற்றுநோயை வென்று மீண்டும் அணிக்கு வர முயற்சிக்கிறார். அவர் இரண்டு உலக் கோப்பைகளை வெல்ல மற்ற வீரர்களுடன் உதவி இருக்கிறார். அப்படிப்பட்ட வீரருக்கு, நீங்கள் அணியின் கேப்டனானதும், அவரது நுரையீரல் திறன் குறைந்துவிட்டது என்று கூறுக்கிறீர்கள். அவர் போராடுவதை பார்க்கிறீர்கள் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நீங்கள் கேப்டனாக இருக்கையில் அதன் தரத்தைப் பராமரிக்க வேண்டும். ஆனால் எப்போது விதிக்கு விதிவிலக்குகள் உண்டு. இங்கே ஒருவர் விதிவிலக்காக இருக்க தகுதியானவர். ஏனென்றால், அவர் உலக கோப்பையை மட்டும் வெல்லவில்லை. புற்றுநோயையும் வென்றுள்ளார். வாழ்க்கையின் கடினமான சவால்களை வென்றுள்ளார். சில கேள்விகளை இங்கு முன்வைக்கிறேன் என்றார்.
மேலும் படிங்க: கிரிக்கெட் உலகில் மற்றொரு விவாகரத்தா?.. பரவும் தகவல்கள்
தொடர்ந்து பேசிய அவர், யுவராஜ் சிங் உடற்தகுதி புள்ளிகளில் சில சலுகைகளை கோரினார். ஆனால் அது அணி நிர்வாகத்தால் மறுக்கப்பட்டது. இருந்தபோதிலும் யுவராஜ் தகுதி பெற்று மீண்டும் அணிக்குள் திரும்பினார். இருப்பினும் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
முடிவுகளை மட்டும் சார்ந்தது அல்ல கேப்டன்ஸி
அதன்பிறகு அவரை மதிக்கவில்லை. அந்நேரத்தில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். அவரது வலுவான ஆளுமையால் அது அவருக்கு ஏற்ப நடந்தது. கோலியின் கேப்டன்ஷிப் குறித்துப் பேசுகையில் உத்தப்பா கூறியது, ‘My way or the highway’ என்ற அணுகுமுறையைக் கொண்ட கேப்டன் எனக் கூறினார். விராட் கோலியின் கேப்டன்சியில் நான் அதிகம் விளையாடவில்லை. ஆனால் அவர் ‘My way or the highway’ போன்ற கேப்டனாக இருந்தார். முடிவுகளை மட்டும் சார்ந்தது அல்ல கேப்டன்ஸி. அது உங்கள் அணியினரை எப்படி நடத்துவது போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது எனத் தெரிவித்தார்.
மேலும் படிங்க: சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!