டிரம்ப் பதவியேற்பதற்கு இன்னும் பத்து நாட்களே உள்ளது. இந்த நிலையில், இன்று அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் மீதான முக்கியமான வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016-ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் டிரம்ப். இதற்கு முன்பும், சில முறை அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு இருந்தாலும், சில பல காரணங்களால் பாதியிலேயே தேர்தலில் இருந்து விலகிவிடுவார். 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் தான் டிரம்ப் கடைசி வரை வேட்பாளராக இருந்தார்…வெற்றியும் பெற்றார். இதனை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
அடுத்ததாக, 2020-ம் ஆண்டு வந்த அடுத்த அதிபர் தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலின் முடிவு நாம் அனைவரும் அறிந்ததே.
ஆம்…இந்தத் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவியினார். இதற்கு அவர் கொண்டுவந்த சட்டத்திட்டங்கள், கொள்கைகள் எல்லாமே ஒருவித காரணம் என்றாலும், அவர் மீதான பாலியல் வழக்கு மிக முக்கியமான காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நாளிதழ் செய்தி…
2018-ம் ஆண்டு பிரபல அமெரிக்கா நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2006-ம் ஆண்டு, டிரம்பிற்கும், அமெரிக்க நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கும் பாலியல் உறவு ஏற்பட்டுள்ளது. அதை 2016-ம் ஆண்டு தேர்தலின் போது, ஸ்டார்மி டேனியல்ஸ் வெளியே கூறாமல் இருக்க அவருக்கு 130,000 அமெரிக்க டாலர்கள் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பணத்தை மைக்கேல் கோஹன் தன்னுடைய பணத்தில் இருந்து எடுத்துகொடுத்திருக்கிறார். அதன் பிறகு, கோஹனுக்கு டிரம்ப் ‘தேர்தல் சட்ட செலவு’ என்று கூறி அந்தத் தொகையை வழங்கியுள்ளார்.
அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுத்த காசு சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் ‘தேர்தல் செலவு’ என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறு.
சட்ட செலவு…
அந்தப் பணத்தை மைக்கேல் கோஹன் தன்னுடைய பணத்தில் இருந்து எடுத்துகொடுத்திருக்கிறார். அதன் பிறகு, கோஹனுக்கு டிரம்ப் ‘தேர்தல் சட்ட செலவு’ என்று கூறி அந்தத் தொகையை வழங்கியுள்ளார்.
அமெரிக்க சட்டத்தின் படி, ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு கொடுத்த காசு சட்ட ரீதியானது தான். ஆனால், டிரம்ப் ‘தேர்தல் செலவு’ என கோஹனுக்கு கொடுத்த பணத்தை பொய் கணக்கு காட்டியது மிகப்பெரிய தவறு.
2018-ல் இருந்து…
ஆக, இந்த வழக்கு தான் 2018-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை, டிரம்பை துரத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க டிரம்ப் என்ன காரணம் கூறினாலும்…எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும், அதை ஏற்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதியாக மறுத்துவிட்டது. ஏன்…நேற்று வரை கூட, டிரம்ப் இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி கடுமையாக போராடினார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
கடந்த ஆண்டு, ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து போட்டியிட்டு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம், அமெரிக்க உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தேதியில் டிரம்ப் நேரிலோ, ஆன்லைனிலோ ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அப்போது, நீதிமன்றம் டிரம்பிற்கு சிறை தண்டனை வழங்காது என்று தகவல்கள் பரவியது.
நீதிமன்றத்தின் உத்தரவின் படி, டிரம்ப் இன்று ஆன்லைனில் ஆஜரானார்.
தீர்ப்பு என்ன?!
“டிரம்ப் குற்றவாறி தான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், அவர் அதிபராக பதவியேற்க உள்ளதால் சிறை தண்டனை உள்ளிட்ட எந்த தண்டனையும் விதிக்கப்படவில்லை” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
என்ன தான், நீதிமன்றம் எந்த தண்டனையும் விதிக்கவில்லை என்றாலும், டிரம்ப் குற்றவாளி என்று அறிவித்ததே அவருக்கு மிகப்பெரிய இழுக்கு.
ஆக, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் அதிபராக பதவியேற்பது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.