ஐசிசி சாம்பியன் ட்ராபி 2025 போட்டிகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் அறிவிக்கவில்லை. ஐசிசி-யிடம் கால அவகாசத்தை பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி அணியை அறிவித்திருக்க வேண்டும். இதற்கிடையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
மேலும் படிங்க: சேவாக், ரோகித் சர்மாவை விட அதிரடி பேட்ஸ்மேன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..!
தாமதம் ஏன்?
பொதுவாக ஐசிசி தொடர்களில் விளையாடு அணிகள் தங்களுடைய வீரர்களின் பட்டியலை ஒரு மாதத்திற்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் அதற்கான கோரிக்கைகளை வைக்கலாம். சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால் சாம்பியன் டிராபிக்கு எந்தெந்த வீரர்கள் தயாராக இருப்பார்கள் என்று இன்னும் தெரியவில்லை, சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பிசிசிஐ கால அவகாசம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடருக்கான அணி மட்டும் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
FULL SCHEDULE OF CHAMPIONS TROPHY 2025…!!!!! pic.twitter.com/Esf77G1iXv
— Johns. (@CricCrazyJohns) December 24, 2024
இங்கிலாந்து தொடரில் ஷமி?
இங்கிலாந்து தொடரில் முகமது சாமி இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள ஷமி உள்ளூர் தொடர்களில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். NCA ஷமிக்கு பிட்னஸ் சர்டிபிகேட் வழங்கினால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஒன்றரை வருடமாக ஷமி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாட வில்லை. கடைசியாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் ஜனவரி 22ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 6, 9 மற்றும் 12ஆம் தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான உத்ததேச இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரிங்கு சிங்.
மேலும் படிங்க: கிரிக்கெட் உலகில் மற்றொரு விவாகரத்தா?.. பரவும் தகவல்கள்