சென்னை: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். […]