சென்னை; பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை மேலும் ஓரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ந் தேதி செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் […]