சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், விதிகளை மீறுவதிலேயே ஆளுநர் குறியாக செயல்படுகிறார் என ஆளுநர் உரை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் வழக்கமான கேள்வி பதில் முடிவடைந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “அரசின் திட்டங்களால் ஒவ்வொரு துறையிலும் தமிழகம் […]