சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்து உள்ளார். தன்னை வேட்பாளராக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது. வேட்பாளர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் […]
