IND vs ENG: சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய கோல்டன் சான்ஸ்..!

Shubman Gill | இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை செய்ய ஒரு கோல்டன் சான்ஸ் இருக்கிறது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற சாதனை இவர் வசம் வர வாய்ப்புள்ளது.  

சுப்மன் கில் இதுவரை

சுப்மன் கில் இதுவரை 47 ஒருநாள் போட்டிகளில் 2328 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடும் அவர் ஆறு சதங்கள் அடித்திருக்கிறார். இது தவிர, ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த பிளேயராகவும் சுப்மன் கில் இருக்கிறார். இவர் எதிர் வரப்போகும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணிக்காக ரோகித் சர்மாவுடன் இன்னிங்ஸைத் தொடங்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவருக்கு கடும் போட்டியை ஜெய்ஷ்வால் இன்னொரு பக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் கில் இந்திய அணியில் இடம்பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஓப்பனிங் யார் விளையாடுவது என்பதில் மட்டுமே மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

சுப்மன் கில் செய்யப்போகும் சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் சுப்மன் கில் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்ய வாய்ப்பு இருக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து சுப்மன் கில் 172 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2500 ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனை இப்போது இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் வசம் உள்ளது. அவருடைய சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அத்துடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2500 ரன்களை வேகமாக எடுத்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெறுவார்.

ஹஷிம் ஆம்லா சாதனை

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2500 ரன்கள் எடுத்து சாதனையைப் படைத்துள்ளார். அவர் 53 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சுப்மான் கில் சிறப்பாக ஆடும்போது இந்த சாதனையை முறியடிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. மேலும், 50க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் 2500 ரன்கள் எடுத்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெறுவார்.

இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர் அட்டவணை

ஜனவரி 22 – முதல் டி20, கொல்கத்தா (இரவு 7 மணி முதல்)
ஜனவரி 25 – இரண்டாவது டி20, சென்னை (இரவு 7 மணி முதல்)
ஜனவரி 28 – மூன்றாவது டி20, ராஜ்கோட் (இரவு 7 மணி முதல்)
ஜனவரி 31 – நான்காவது டி20, புனே (இரவு 7 மணி முதல்)
பிப்ரவரி 2 – ஐந்தாவது டி20, மும்பை (இரவு 7 மணி முதல்)

இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை

பிப்ரவரி 6 – முதல் ஒருநாள் போட்டி, நாக்பூர் (மதியம் 1:30 மணி முதல்)
பிப்ரவரி 9 – இரண்டாவது ஒருநாள் போட்டி, கட்டாக் (மதியம் 1:30 மணி முதல்)
பிப்ரவரி 12 – மூன்றாவது ஒருநாள் போட்டி, அகமதாபாத் (மதியம் 1:30 மணி முதல்)

மேலும் படிங்க: கிரிக்கெட் உலகில் மற்றொரு விவாகரத்தா?.. பரவும் தகவல்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.