கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படும் ரோஹித்! இனி இவர் தான் கேப்டன்!

சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது. இந்த தொடரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து பிசிசிஐ சமீபத்தில் மீட்டிங் நடத்தியுள்ளது. இதில் கேப்டன் ரோகித் சர்மா,  பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார். இந்த மீட்டிங்கில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும், விராட் கோலி எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்ததும் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிங்க: IND vs ENG: இனி இந்த வீரர்களுக்கு எப்போதும் டி20 அணியில் வாய்ப்பு இல்லை!

சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா கேப்டன்

பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பிசிசிஐ எடுக்கும் எந்த ஒரு முடிவிற்கும் முழு சம்மதம் தெரிவிப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் முதல் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா அணியின் கேப்டனாக செயல்பட்டார். மேலும் தொடர் முழுவதும் பும்ரா மட்டுமே சிறப்பாக விளையாடி இருந்தார். ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்கும் பட்சத்தில் பும்ரா முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

ஒருநாள் அணியின் கேப்டன் யார்?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஒயிட் பால் தொடர்களில் ரோகித் சர்மா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார், அதே சமயம் 2023 ஒரு நாள் உலகக் கோப்பையை பைனல் வரை கொண்டு சென்றார். சாம்பியன்ஸ் டிராபி முடிவை பொறுத்து கேப்டனாகவும், ஒரு வீரராகவும் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ரோகித் சர்மா. தற்போது சூரியகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

உள்ளூர் தொடர்களில் விளையாட கோரிக்கை

சீனியர் வீரர்கள் குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அவர்களை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற எந்த ஒரு உள்ளூர் தொடர்களிலும் அவர்கள் இருவரும் விளையாடவில்லை. ரோகித் சர்மா கடைசியாக 2015 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் விளையாடினார். விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் விளையாடினார்.

இங்கிலாந்து தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் விரைவில் நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் ஜனவரி 22ஆம் தேதியும், ஒரு நாள் போட்டிகள் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்க உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் இடம்பெறும் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: ஓய்வு பெறுகிறேன்… புதிய கேப்டனை சீக்கிரம் பாருங்க – பிசிசிஐ கிட்ட சொன்ன ரோகித் சர்மா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.