ராஜ்கோட்,
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த ஆட்டங்கள் ராஜ்கோட்டில் நடக்கிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
Related Tags :