வதோதரா,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி மராட்டியம் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது .
இந்த நிலையில் , இன்று நடைபெறும் 2வது காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் – விதர்பா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போப்பட்டது. அதில் டாஸ் வென்ற விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் விதர்பா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். விதர்பா அணியில் சுபம் கர்வால் கார்த்திக் சர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர் .
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு விதர்பா அணி 291 ரன்கள் குவித்தது. விதர்பா அணியில் கார்த்திக் சர்மா 62 , சுபம் கர்வால் 59 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் யாஷ் தாகூர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.