மத்திய பிரதேசம் திவாஸ் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் படிதார். இவரது வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் செய்த சோதனையில் வீட்டிற்குள் கிட்டதட்ட 6 மாதமாக ஃபிரிட்ஜில் பெண் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
PTI அறிக்கையின் படி, கொலை செய்யப்பட்டப் பெண் புடவை மற்றும் நகைகள் அணிந்திருக்கக்கூடும் என்றும், அவரது கைகள் கழுத்தோடு இணைத்து கட்டப்பட்டிருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து போலீஸார் ”இந்தக் கொலை ஒரு வருடத்திற்கு முன்பே நடந்திருக்கலாம்” என்று கூறுகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பெண் சஞ்சய் படிதருடன் 5 வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வீட்டில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் குடியேறியுள்ளார் சஞ்சய். அதன் பின்னர், 15 நாட்களுக்கு ஒருமுறை வீட்டை காலி செய்வது, மீண்டும் குடியேறுவது என இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, அந்த வீட்டின் ஒரு அறையை காலி செய்துவிட்டு, மீதம் இருக்கும் இரண்டு அறைகளில் அவரது பொருட்களை வைத்துள்ளார். இந்த அறைகளையும் விரைவில் காலி செய்யப்போவதாக சஞ்சய் சமீபத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, இன்னொருவருக்கு அந்த வீட்டினை வாடகைக்கு விட்டுள்ளார் வீட்டின் உரிமையாளர். அப்போது தான் துர்நாற்றம் வீசி கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொலை குறித்து விசாரணைகள் போய் கொண்டிருக்கிறது.