நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
“துபாயில் நடந்த 24எச் 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடம் பிடித்துள்ளதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுத்துறை லோகோவைப் பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அஜித்குமார் இன்னும் இதுபோல் தொடர்ந்து வெற்றி பெற்று நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று உதயநிதி தனது வாழ்த்தை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.